தமிழகம் ஒரு புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கப் போகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தில் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி.இந்தாண்டு தமிழகம் ஒரு புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கப் போகிறது. வளர்ச்சிக்கு எதிரானவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என இந்திய மக்கள் விரும்புகின்றனர்.
மத்திய அரசின் திட்டத்தால் கோவையில் சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகளவில் பயனடைந்துள்ளன.சிறு வியாபாரிகள், விவசாயிகளுக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி என்பது கருணை மிகுந்த ஆட்சியாகும்.ஆனால், எதிர்க்கட்சிகள் கருணையற்ற ஆட்சியை நடத்தவே விரும்புகின்றனர்.
ஊழல் செய்வதற்கு மட்டுமே திமுகவினர் தங்களது மூளையை பயன்படுத்துகின்றனர். திமுக ஆட்சியில் ஏற்பட்ட மிகப்பெரிய மின்வெட்டை நீங்கள் மறக்க மாட்டீர்கள்.திமுக, காங்கிரஸ் கூட்டணியால் தமிழகத்துக்கு நல்லாட்சியை தர முடியாது. சட்டை பையை நிரப்பி கொள்ளவே, திமுக – காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க நினைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
பல்வேறு நலத்திட்டங்களைபிரதமர் தொடங்கி வைத்தார். பின் விழா மேடையில் இருந்து இறங்கும் போது, அருகில் நின்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை செல்லமாக தோளில் தட்டி கொடுத்தார்.
- பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ.330 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகளை திறந்து வைத்தார்.
- நெய்வேலியில் ரூ.8,000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட என்.எல்.சியின் 2 புதிய அனல் மின் நிலையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் 8 வழிச்சாலை கோரம்பள்ளம் பாலம் மற்றும் ரயில்வே பாலம் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
- கீழ் பவானி திட்டத்தை விரிவுபடுத்துதல், புதுப்பித்தல் மற்றும் நவீனமாக்கல் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
- ரூ.107 கோடி செலவில் 9 ஸ்மார்ட் சிட்டி நகரங்களில் ஒருங்கிணைந்த ஸ்மார்ட் சிட்டி கட்டுப்பாட்டு மையத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
- தென் மாவட்டங்களில் 709 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பிரதமர் மோடி, கோவை மொடிசியா அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு நாராயணசாமி சொந்த கட்சி தலைவரிடம் பொய் பேசியுள்ளார். தன் மக்களை ஏமாற்றியுள்ளார். பொய் கூறுவதையே கலாச்சாரமாக கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியால் மக்களுக்கு எப்படி சேவை செய்ய முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.