தமிழகத்திற்கு மீண்டும் வரும் பிரதமர் மோடி, நிறைவடைந்த பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். திட்டங்களை தொடங்கி வைத்த பின் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 14-ஆம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடி, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் சென்னை மெட்ரோ சேவை உட்பட ரூ.8,000 கோடிக்கு மேல் மதிப்பிலான பலத் திட்டங்களை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
**************************
தென்காசி பாவூர் சத்திரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள முதல்வர் பழனிசாமி. விவசாயிகளின் நலனுக்காக ரூ.20 கோடி மதிப்பில் 10 மாவட்ட தலைநகரங்களில் பிரமாண்ட சந்தை அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
விவசாயிகள் பயிரிடம் காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்காக பிரமாண்ட சந்தை அமைக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும்ம் நெல்லை மாவட்டத்திலும் விவசாயிகளுக்கு சந்தையை கட்ட அரசு பரிசீலிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
*****************************
சிபிஐ கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் டி.ராஜா அவர்கள் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் வேளாண் சட்டத்தை எதிர்த்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளான் சட்டங்களை ரத்து செய்யாமல், பாஜக வெறும் பேச்சுவார்த்தை வருகிறது.
வரும் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், மக்களால் தண்டிக்கப்படுவார்கள் என்றும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முழு அதிகாரத்தை கொடுத்து அவர்கள் விருப்பப்படி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
******************************
பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் இலவசங்களை கொடுத்தும் என்ன பயன் என ஈஸ்வரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் எத்தனை இலவசங்கள் கொடுத்தாலும் டீசல் பெட்ரோல் விலையை குறைக்காமல் ஏழை மக்களை காப்பாற்ற முடியாது. பெட்ரோல், டீசல் விலையை பற்றியோ அல்லது கேஸ் விலையை பற்றியோ முதலமைச்சர் எங்குமே பேசியது கிடையாது. அது ஏதோ பிரச்சனை இல்லாத போல அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் டீசல், பெட்ரோல் மற்றும் கேஸ் விலையை குறைக்காமல் மக்களை காப்பாற்ற முடியாது என அவர் தெரிவித்தார்.
***************************
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பிப்.22-ஆம் தேதி பெருபான்மையை நிரூபிக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆளுநர் தமிழிசையை எதிர்க்கட்சி தலைவர் சந்தித்து வலியுறுத்தி வந்த நிலையில், துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
**********************************