செய்திகள்

 


ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு பரோல் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

__________________

ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது

_____________________

நாடு முழுவதும் பொதுமுடக்கத்தை மார்ச் 31ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

____________________

துணைநிலை ஆளுநர் உத்தரவு:

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 2மூ குறைத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

_______________________

தமிழக முதலமைச்சர் அறிவிப்பு:

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள 6 சவரன் வரையிலான நகைக்கடன்களும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்றுள்ள அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

___________________________

அரசுத் தரப்பில் தமிழகத்தில் சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறையில் பயோ-மெட்ரிக் வருகைப்பதிவேடு முறை பின்பற்றப்படுகிறது.

இதேபோல் சென்ைன ஐகோர்ட் மற்றும் மதுரை கிளையில் பயோ-மெட்ரிக் முறை பின்பற்றப்படுகிறது. இதைப் போல அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் பயோ-மெட்ரிக் முறையை அமல்படுத்த தேவையான நடவடிக்கையை பதிவாளர் ஜெனரல் மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

______________________

தமிழகத்தில் 26.02.2021 மட்டும் 52,746 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தற்போது வரை லண்டனில் இருந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்த 56 பேருக்கு கொரோனா ெதாற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

_________________________

தமிழகம் முழுவதும் 3வது நாளாக அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மாலை 3 மணிக்கு தொழிலாளர் நல ஆணையம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். தொழிலாளர் நல கூடுதல் ஆணையர் வள்ளலார் தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

_____________________

காவிரி விவசாய சங்க மாவட்டத் தலைவர் சுப்பையன் தலைமையில் நடைபெற்ற  போராட்டத்தில் மேட்டூர் சரபங்கா திட்டத்தை  நிறைவேற்றிய முதல்வரை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். 

இதேபோல் ஓகை பகுதியிலும், தமிழக காவிரி விவசாயிகள் கருப்புக் கொடியுடன் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

____________________________

கீழடி 7ம் கட்ட அகழாய்வு பணியின் தொடர்ச்சியாக கொந்தகை,  அகரத்தில் 26.02.2021 அகழாய்வு பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த 13ம் தேதி தொடங்கியது. 7ம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

________________________