இரு வரி செய்திகள்

 


7 பேரை விடுவிக்க வேண்டும்  அரசின் பரிந்துரையை ஆளுநர் பன்வரிலால் புரோகித் நிராகரித்த்துளளதால் இதற்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

***********************

எழுவர் விடுதலையில், உங்கள் முகமூடி கழன்று கீழே விழுந்து விட்டது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்களின் உதவி தேவை என்றால் சொல்லுங்கள். நாளைக்கே குடியரசுத் தலைவரைச் சந்திக்க முதலமைச்சர் சென்றாலும் உடன் வரத் தயாராக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்

*********************

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையில், முடிவு எடுக்க குடியரசுத்தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.

************************

பாஜக அரசின் நயவஞ்சகத்தனமும், அதிமுக அரசின் கையாலாகாத்தனமுமே எழுவர் விடுதலை தடைக்குக் காரணம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

*************************

பெங்களூருவிலிருந்து சசிகலா வருகின்ற 8 ஆம் சென்னை வரவுள்ள நிலையில் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் மற்றும்  எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று மாலை 5 மணி அளவில் சென்னையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் வைத்து ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர்

***************************

கடந்த 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.

*********************

அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி. தளபதி சொல்வதையெல்லாம் செய்து முடிக்கும் பழனிசாமிக்கு நன்றி. வாழ்த்துக்கள் என டுவிட் செய்துள்ளார்.

***********************

சென்னை பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

*********************

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது காவல்துறை பதிவு செய்த வழக்குகள் திரும்ப பெறப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

*******************

முதல்வர் பழனிசாமி பயிர் கடன்களை தள்ளுபடி செய்திருப்பது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

*******************