மாந்தி தோஷத்துக்கு ஒரே பரிகாரத் திருத்தலம்
இந்தியாவிலேயே மாந்தி தோஷத்துக்கு ஒரே பரிகாரத் திருத்தலம் திருநறையூர்தான். ஜாதக ரீதியாக மாந்தியல் ஏற்படும் திருமணத்தடை புத்திர தோஷம் போன்றவைக்கு பரிகாரம் கிடையாது. மாந்தி என்பது சனியின் புதல்வன் ஆவார் அதனால் சனிக்கு செய்தாலே போதும். மாந்திக்கு என்று தனியாக வழிபாடு கிடையாது.
திருநறையூர் சனிபகவானை வழிபடும்போது அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி, ஏழரை சனி மட்டும் இல்லாமல், ஜாதக ரீதியாக அனைத்துவித சனி தோஷங்களும் திருமணத்தடை புத்திர தோஷம் நீங்கும். சனி பகவானுக்குரிய மன நிம்மதி குறைகள், பயம் குழப்பமும் தீரும்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து கிழக்கே 10 கி.மீ தொலைவில் திருநறையூர் நாச்சியார் திருக்கோயில் அமைந்திருக்கிறது.
சனி பகவான் எழுந்தருளுகிறார். இவருக்கு சனிச் சன்னிதியும் தனிக் கொடிமரமும் அமைந்திருக்கிறது. அவருக்கு இடமும் வலமும் மந்தா தேவி, சேஷ்டா தேவி என்ற இரு மனைவிகளும் கீழ் வரிசையில் மாந்தி, குளிகன் என்ற குழந்தைகளும் திருக்காட்சி தருகிறார்கள். சனீஸ்வரனுக்கு பின்புறத்தில் சூரிய பகவான் இருக்கிறார்.
நவக்கிரங்களுடனும் சூரியன் தன் இரு மனைவிகளான உஷா, பிரதிக்ஷாவுடன் காட்சி தருவதும் வேறெங்கும் காணமுடியாத தனிச்சிறப்பு.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி.
ஓம் நமசிவாய
மோகனா செல்வராஜ்