இளவரசி, சுதாகரனின் 6 சொத்துக்கள் அரசுடமை- ஆட்சியர் அறிவிப்பு

 


இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான ஆறு சொத்துக்கள் அரசுடமை யாக்கப்பட்டது என சென்னை ஆட்சியர் அறிவித்துள்ளார்.

08/02/2021 சசிகலா தமிழகம் திரும்ப உள்ள நிலையில் அவரது உறவினர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. 

2017-ம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின் அடிப்படையில் இவர்கள் சொத்து அரசுடமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 6 சொத்துக்கள் தமிழக அரசின் சொத்து என உரிய பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இதனால் அனைவருக்கும் தெரிவிப்பதுயாதெனில் இந்த சொத்துக்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு சொத்துக்கள் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே சொத்துக்களில் இருந்து பெறப்படும் வருவாய் (வாடகை, நிலுவை வாடகை உட்பட)அனைத்தும் தமிழ்நாடு அரசுக்கு பாத்தியப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.