குடியரசு தலைவர் விருது-2வது முறை


இரண்டாவது முறையாக குடியரசு தலைவர் விருதை பெற தேர்வாகியுள்ள கே.வி.தாமஸ்-க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கேரளா திரிச்சூர் எருமாப்பள்ளியைச் சேர்ந்த கே.வி தாமஸ் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் கிளைச்சிறையில் சிறப்பு கண்காணிப்பாளராக பணியாற்றிவருகிறார். இவர் தனது சிறந்த சேவைக்காக 2வது முறையாக குடியரசு தலைவர் விருது பெற்றுள்ளார்.

1990-ம் ஆண்டு சிறைப்பணியில் சேர்ந்த இவர் 30 ஆண்டுகளாக வருகிறார்.

இவர் சிறைப்பணியில் நன்னடத்தைக்காக 23-க்கும் அதிகமான விருதுகளை பெற்றுள்ளார். இவரது நற்குணங்களை அடிப்படையாக கொண்டு, 2015-ம் ஆண்டு குடியரசு தலைவர் விருது கிடைத்தது. இந்நிலையில், இரண்டாவது முறையாக குடியரசு தலைவர் விருதை பெற தேர்வாகியுள்ளார். இதனையடுத்து, இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.