ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு நேற்று 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
நாமக்கல் கோட்டையில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோயிலில், 18 அடி உயரத்தில் கைகூப்பி வணங்கிய நிலையில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் காட்சியளிக்கிறார்.
மார்கழி மாதம் அமாவாசையையொட்டி, நேற்று இங்கு ஹனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு 1 லட்சத்து 8 வடைமலை சாத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
கொரோனா பீதி, தொடர் மழையால், வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் சற்று குறைந்திருந்தது. காலை முதல் இரவு வரை பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.