நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசம் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

 



டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக போடப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.  

டெல்லியில் கரோனா தடுப்பு மருந்து ஒத்திகையை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேரில் பார்வையிட்டார்.


பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஹர்ஷ்வர்தனிடம்  கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஹர்ஷ்வர்தன், டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்” என்றார். 

 முன்னதாக,  கொரோனா தடுப்பூசி  தொடர்பாக திட்டமிட்டு பரப்பப்படும் புரளிகளை மக்கள் நம்ப வேண்டாம். கரோனா தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்தார்.