சமையல் டிப்ஸ்
* ரவா லட்டு செய்யும்போது அதனுடன் அவலையும் பொடித்து சிறிது நெய்யில் வறுத்து 3 டேபிள் ஸ்பூன் பால் பவுடரையும் கலந்து செய்தால் ரவா லட்டு சுவையாக இருக்கும்.
* சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது தேங்காய் பால் அரை கப் ஊற்றிக் கிளறிய பின் இறக்கவும். இவ்வாறு செய்தால் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.
* வாழைப்பழங்கள் வெளிபடுத்தும் வாயுக்கள் மற்ற பழங்களை எல்லாம் விரைவாக பழுக்க வைத்துவிடும், அதனால் வாழைப்பழத்தை தனியாக வைப்பது நல்லது.
* ஆப்பத்துக்கு பச்சரிசியை வெந்நீரில் நனைத்து அரைத்தால் மொறுமொறு என இருக்கும்.
* பலகாரம் செய்யும்போது கொய்யா இலையை எண்ணெயில் போட்டு எடுத்துவிட்டு பலகாரங்களைச் செய்தால் எண்ணெய் பொங்கி வழியாது.
* தக்காளியின் தோல் நீக்க மேல்பக்கமும் கீழ்ப்பக்கமும் கத்தியால் தக்காளியை சிறிது கீறிவிட்டு சுடுநீரில் போட்டு எடுத்தால் தோல் சுலபமாக வந்துவிடும்.
* சேனைக்கிழங்கு நறுக்கும் முன்பாக கையில் சிறிது தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டு நறுக்கினால் கையில் அரிப்பு ஏற்படாது.
* கத்தரிக்காய் வாடாமல் இருக்க ஹhட் பாக்ஸில் வைத்து கத்திரிகாயை மூடினால் காய் வாடாமல் இருக்கும்.
* பிரெட் பக்கோடா செய்வதற்கு முன் பிரெட் ஸ்லைஸ்களை பாலில் போட்டு எடுத்த பிறகு பக்கோடா மாவில் போடவும். பிரெட் பக்கோடா சுவையாக இருக்கும்.
* துவரம் பருப்பை மிக்ஸியில் கரகரப்பாக அரைப்பதால் சமைக்கும்போது பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் சமையல் பயணம் தொடரும்.
வணக்கம் அன்புடன் கார்த்திகா