“ப்ளீஸ்.. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்”- மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த சிங்கப்பூர் பிரதமர்

 


கொரோனா தடுப்பூசி நம்மையும், நம் குடும்பத்தினரையும் பாதுகாக்கும். ப்ளீஸ்.. தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லுங்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. 

இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, தடுப்பு மருந்திற்கு அவசரகால ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது.

அந்தவகையில், பிரிட்டனில் ஃபைசர் தடுப்பூசியும், அமெரிக்காவில் மார்டனா கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

மேலும் ஃபைசர் தடுப்பு மருந்து, கொரோனாக்கு எதிராக 95 சதவீதம் செயல்படுவதால், ஃபைசர் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியது.

மேலும், தடுப்பூசி குறித்த அச்சத்தை போகும் விதமாக அந்நாட்டு பிரதமர் லீ சியன் லுங்க், மக்கள் முந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்திக் கொண்டார். 

அதன்பின் பேசிய அவர், “கொரோனா தடுப்பூசி நம்மையும், நம் குடும்பத்தினரையும் பாதுகாக்கும். ப்ளீஸ்தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.” என தடுப்பூசி போடுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.