கமல் காட்டிய குறும்படம் .. ஒட்டுமொத்த எம்ஜிஆர் ரசிகர்களும் நெகிழ்ச்சி

 




அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவிட்டு எம்ஜிஆர் தாயகம் திரும்பிய நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் கமல்ஹாசன் பேசியது குறித்த வீடியோவை 17.01.2021 தினம் அவர் குறும்படமாக காட்டியுள்ளார். 

இதனால் செய்வதறியாது அதிமுகவினர் கையை பிசையும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் திலகம் எம்ஜிஆர் சினிமாவில் நடிக்கும் காலத்திலிருந்தே ஏழைகளுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்து வந்தார். 

பின்னர் முதல்வரானதும் அனைத்து தரப்பினருக்கும் நல்லதையே செய்தார். ஆனால் தப்பு செய்தோரை ராமாபுரம் தோட்டத்திற்கு வரவழைத்து "புத்திமதி" சொல்லி அனுப்புவார். 

அவரது ஆட்சியில் சுத்தமானதாக இருந்ததால் இன்றளவும் அவர் போற்றி புகழப்பட்டு வருகிறார். கட்சி பேதமின்றி எம்ஜிஆருக்கு ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். 

வீடியோ இந்த நிலையில் இன்று எம்ஜிஆரின் 104ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கமல்ஹாசன் சென்னை ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் சிகிச்சை அதில் எம்ஜிஆர் 1984ஆம் ஆண்டு உடல் நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் போய் சிகிச்சை பெற்றார். 

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தாயகம் திரும்பினார். அப்போது அவருக்கு சிகிச்சை அளித்து மறுபிறவி கொடுத்த மருத்துவர்களுக்கு பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. குறும்படம் இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார். 

அதுவும் எம்ஜிஆர் முன்னிலையில் அவர் பேசிய வீடியோவைத்தான் குறும்படமாக வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில் எங்கள் அண்ணன் எம்ஜிஆரை எங்களுக்கு திருப்பி தந்த டாக்டர் ப்ரீட்மேன், டாக்டர் சரவணன், டாக்டர் ராமானுஜம் ஆகியோருக்கு நன்றி என பலர் சொல்லிவிட்டார்கள். 

நன்றியுணர்வு இதனால் எனக்கு வார்த்தைக்கு பஞ்சம் வந்துவிட்டது. ஆனாலும் எங்கள் நன்றியுணர்வு இன்னும் தணியவில்லை. எம்ஜிஆர் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவுக்கு போன போது மிகவும் கவலைப்பட்டவர்களின் பட்டியலில் நானும் இருந்தேன். 

அவர் அமெரிக்காவிலிருந்து திரும்பி வரும் போது அவரை டிவியில் பார்ப்பதற்காக எனது படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு வீட்டிற்கு வந்தேன். 

சினிமா அவர் விமானத்திலிருந்து வெளியே வந்ததும், அவர் சினிமாவில் பாடிய ஒரு பாடல் எனக்கு நினைவுக்கு வந்தது. 

அதில் தேக்கு மரம் உடலை தந்தது , சின்ன யானை நடையை தந்தது, பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது, பொன்னல்லவோ நிறத்தை தந்தது என்ற வரிகளுக்கு ஏற்ப அவர் வந்தார். 

இதற்காக டாக்டர் ப்ரீட்மேனுக்கு சிரம் தாழ்த்தி பாதம் தொட்டு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கலங்கிய ரசிகர்கள் நான் பேசியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க தேவையில்லை. நான் என்ன சொன்னேன் என்பதை டாக்டர் பிரீடுமேன் உணர்ந்திருப்பார் என்றார் கமல்ஹாசன். 

அப்போது அமெரிக்க டாக்டர் பிரீடுமேன் இருகைகளையும் கூப்பி வணக்கம் சொல்கிறார். இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் கண்கலங்கி நிற்கிறார்கள். கையை பிசையும் அதிமுக கமல் வெளியிட்ட இந்த வீடியோ ரசிகர்களின் நெஞ்சை தொட்டுவிட்டது. 

இத்தனை நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தில் எம்ஜிஆர் குறித்து பேசிய போதெல்லாம் அவர் தங்களுக்கு சொந்தமானவர் என அதிமுக எதிர்த்து வந்தது. 

இந்த நிலையில் எம்ஜிஆர் முன்னர் தான் பேசி அதற்கு அவர் உருக்கமாக இருந்த வீடியோவை வெளியிட்டதன் மூலம் தானும் எம்ஜிஆரும் எத்தனை நெருக்கம் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் கமல். 

இதனால் அதிமுக என்ன செய்வது என தெரியாமல் கையை பிசைந்து வருகிறது.