சிம்புவின் படங்களுக்கு ஒத்துழைப்பு கிடையாது – தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

 




இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து தற்போது வெளியாகியுள்ள புதிய தமிழ் திரைப்படம் தான் ஈஸ்வரன். 

இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே பல சர்ச்சைகள் எழுந்து வந்தது. அதாவது ஏற்கனவே அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் தயாரிப்பாளர் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு சிம்பு பதில் சொல்ல வேண்டும் என புகார் ஒன்றை கொடுத்துள்ளார். 

அதுமட்டுமல்லாமல், கொரில்லா படத்தின் தயாரிப்பாளரும் அட்வான்ஸ் வாங்கி விட்டு சிம்பு படம் நடிக்காமல் சென்று விட்டதாக புகார் கொடுத்துள்ளாராம்.

ஏற்கனவே இந்த பிரச்சினைகள் நிலுவையில் உள்ள நிலையில் இது தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போது பெரும் பூகம்பமாக கிளம்பியுள்ளது. 

இது சம்பந்தமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் ஈஸ்வரன் படத்தின் தயாரிப்பாளர் பாலாஜி அவர்களின் கோரிக்கையை ஏற்று சிம்புவின் ஈஸ்வரன் படம் ரிலீஸ் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இனிமேல் சிம்புவின் படங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க போவதில்லை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.