காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பூட்டா சிங் காலமானார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பூட்டா சிங் இன்று காலமானார் என்று செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் பூட்டா சிங். ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வந்தவர்.
முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோருக்கு மிகவும் நெருக்கமான தலைவராக விளங்கியவர்.
இந்நிலையில், முதுமை சார்ந்த உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பூட்டா சிங் இன்று காலமானார்.
அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனார்
இவர், அகாலிதள உறுப்பினராக தனது முதல் தேர்தலில் போராடி 1960 களில் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.
ராஜஸ்தானின் சாத்னா தொகுதியில் இருந்து 1962 இல் மூன்றாவது மக்களவையில் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்பின்னர் 7 முறை வெற்றி பெற்று எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மத்திய மந்திரி, கவர்னர் பதவி தவிர கட்சியின் முக்கிய பொறுப்புகளிலும் சிறப்பாக செயலாற்றியவர் பூட்டா சிங்.
பிரதமர் நரேந்திர மோடி வருத்தத்தைத் தெரிவித்ததோடு அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் தனது இரங்கல் என்று ட்வீட் செய்துள்ளார்