தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், குறைக்கப்பட்ட பாடங்கள் எவை? என்பதற்கான தகவல்களையும் உடனே வெளியிட பெற்றோரும், கல்வியாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு வருகிற 19-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்காக பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணிகள் நேற்று முதல் தொடங்கி இருக்கின்றன. மரத்துக்கு அடியில் வகுப்பறைகள் நடத்தவும் பள்ளிகள் திட்டமிட்டு வருகின்றன.
*******************
தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நற்பணிகளை கருத்தில்கொண்டு சாதனை ஊக்கத்தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
********************
சிவகங்கை, திருப்பத்தூர், வேலு}ர் மாவட்டங்களில் 39 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
******************
பாகிஸ்தானில் சீக்கிய வழிபாட்டுத் தலத்தைச் சேதப்படுத்திய 3 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
****************
கியு பாவை பயங்கரவாத ஆதரவு நாடாக அமெரிக்கா மீண்டும் அறிவித்துள்ளது.
*******************
திருவாரூரை சேர்ந்த பிரபல எழுத்தாளர் சோலை சுந்தர பெருமாள் காலமானார். அவருக்கு வயது 70.
*****************
அமெரிக்காவின் Missouri மாகாணத்தில் 1800 ஆண்டுகளுக்கு முந்தைய பீர் குகை மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
**********************
கர்நாடகத்தில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து 15-ந் தேதிக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.
****************
சபரிமலை கோவிலில் மகரவிளக்கு பு ஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி ஐயப்பசாமிக்கு அணிவிக்கப்படும் திருவாபரண ஊர்வலம் பந்தளத்தில் இருந்து புறப்பட்டது.
****************
சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து இந்தியாவுக்கு பலமான அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளன என்று இந்திய ராணுவ தளபதி நரவனே கூறியுள்ளார்.
****************
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் இன்று 50-வது நாளை எட்டி உள்ளது.
******************
அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
*****************
வீடு கட்டுமான நிறுவனங்கள் வீட்டின் விலையைக் குறைத்து நிர்ணயிப்பதில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று தென்னிந்திய சிமென்ட் உற்பத்தியாளர் சங்கம் (எஸ்ஐசிஎம்ஏ) வலியுறுத்தியுள்ளது.
******************
புதுச்சேரியில் பருவம் தவறிய மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 4 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
*****************