மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 38வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். வேளாண் சட்டங் களை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக் கான விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டம் ஒரு மாதத்தை கடந்தும் தீவிரமாக நடந்து வருகிறது.
_____________________________________
சினிமா படத்தயாரிப்பாளர் கே.பி.ஃபிலிம்ஸ் பாலு காலமானார். சின்னத்தம்பி உள்பட 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே.பி.ஃபிலிம்ஸ் பாலு காலமானார்.
____________________________________
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1,03,05,788-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,49,218-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 99,06,387-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 19,079 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 22,926 பேர் குணமடைந்துள்ளதாகவும், 224 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
_______________________________
தடுப்பூசிபோட விருப்பும் நபர்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார்.
அனைத்து வகையான மருந்துகளும் தயார் நிலையில் இருக்கும் என கூறினார். ஒரு நாளைக்கு 100 பேருக்கு தடுப்பூசி போட முடிவு எனவும் கூறினார்.
_____________________________
கோபிச்செட்டிபாளையத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோபிச்செட்டிபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டு மனை பட்டா வழங்கினார். ஏற்கனவே வீடு உள்ளவர்களுக்கு பட்டா வழங்கியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
___________________________
டெல்லியில் இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பை ரத்து செய்யுமாறு பிரதமர் மோடிக்கு சுப்ரமணியசாமி கோரிக்கை விடுத்துள்ளார். அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்ற 150 வீரர்கள் கொரோவால் பாதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.