விதிமுறைகளை மீறி செயல்பட்டவை கடன் தரும் ஆப்ஸ்களை நீக்கியது கூகுள் நிறுவனம்

 


இந்தியாவில் சுமார் 30 லோன் ஆப்ஸ்களை பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியுள்ளது.  டிஜிட்டல் மயமாகியுள்ள நிலையில், ஸ்மார்ட் போன்கள் மூலம் விரைவாக கடன் வழங்கும் நடைமுறை தற்போது பரவலாக அதிகரித்து வருகிறது. 

இதற்கென இந்தியாவில் கடன் வழங்குவதற்கு ஆப்ஸ்கள் உள்ளன

கடனை செலுத்த முடியாமல் நிறுவனங்களின் மிரட்டல் உள்ளிட்ட நெருக்கடிகளுக்கு ஆளாக நேரிடுகிறது.

 கடன் வாங்கியவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.  

இத்தகைய ஆப்ஸ்கள் தொடர்பாக பயனாளர்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன. 

இத்தகைய ஆப்ஸ்கள் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இல்லை. 

இதைத்தொடர்ந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆப்ஸ்களை கூகுள் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. இதில், சுமார் 30 ஆப்ஸ்களை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.