பெங்களூரு: "நான் உண்மையாக இருப்பதால்தான் இந்த டிரான்ஸ்பர் வந்துள்ளது.. ஆனால் எங்கே போனாலும் நான் இப்படிதான் சமரசம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து வேலை பார்ப்பேன்" என்று ஐபிஎஸ் அதிகாரி ரூபா உருக்கமான ட்வீட் பதிவிட்டுள்ளார்..!
சசிகலா ஜெயிலில் இருந்தபோது, அதிகமாக பேசப்பட்டு வருபவர் சிறைத்துறை டிஐஜி ரூபா.. கடந்த 2 வருஷத்துக்கு முன்பு சிறையில் சசிகலாவுக்கு கிச்சன் உள்ளிட்ட ஸ்பெஷல் வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி கைமாறியதாக அப்போதைய சிறைத்துறை டிஐஜியாக இருந்த பெண் அதிகாரி ரூபாதான், பரபரப்பு குற்றச்சாட்டை உயர் அதிகாரி மீது கூறினார்.
அதேபோல, சசிகலா ஹாயாக வெளியே ஷாப்பிங் சென்றுவிட்டு வந்ததையும் அம்பலப்படுத்தியவர் இதே ரூபாதான்..
இதனால், இது தொடர்பான முறைகேடுகள் குறித்து விசாரிக்க அப்போது உயர்மட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அது தொடர்பான வழக்கும் இப்போதும் நடந்து வருகிறது.
ஆனால், சுதந்திரமாக இருந்த ஜெயிலுக்குள் இருந்தார் என்ற புகாருக்காக சசிகலாவின் தண்டனையை நீடிக்க முடியாது.
அதே சமயம், நன்னடத்தை விதிகளை காரணம் காட்டி அவரை முன்கூட்டியே விடுதலை செய்யும் முடியாது என்று கூறப்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில்தான் ரூபா சிறைத் துறையிலிருந்து போக்குவரத்து பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார் ரூபா.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஐஜியாக பதவி உயர்வு பெற்ற ரூபா, கர்நாடக மாநிலத்தின் முதல் பெண் உள்துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
அவர் உள்துறை செயலாளர் ஆனதுமே சசிகலா விடுதலையாவதில் சிக்கல் நீடிக்கும் என்றும் செய்திகள் கசிந்து வந்தன.
இந்நிலையில், உள்துறைச் செயலாளரான ரூபா, கர்நாடக மாநில கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டிருக்கிறார்.
இதையடுத்து, . ரூபா ஒரு ட்வீட்டை உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அதில், பணிக்காலத்தில் 2 மடங்கு அதிகமான பணிமாற்றம் செய்யப்பட்டதாகவும், நான் உறுதியான நடவடிக்கை எடுத்ததால் இந்த பணியிட மாற்றம் இருக்கலாம் என்றும் ஆனால் தொடர்ந்து என்னுடைய வேலையை சமரசமின்றி செய்வேன், தொடர்ந்து நேர்மையாக இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.
ஒருவேளை என்னுடைய மாற்றத்தால் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுத்தால் அதையும் வரவேற்பேன் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த டிரான்ஸ்பரால் நிம்மதியடைந்தது சசிகலா தரப்புதானாம்.. எங்கே உள்துறை செயலாளராக இருக்கும்வரை மறுபடியும் விடுதலையில் ஏதாவது சிக்கல் வந்துவிடுமோ என்று பயந்து கொண்டே இருந்த நிலையில், இப்போது ரூபாவுக்கு டிரான்ஸ்பர் கிடைத்துள்ளது நிம்மதியை தந்துள்ளதாக கூறப்படுகிறது.