தேவஸ்தானம் வேண்டுகோள்:
வருகின்ற 24, 26ஆம் தேதிகளில் விடுமுறை நாள் என்பதால் திருமலைக்கு வரும் பக்தர்கள் ஆலோசித்து தகுந்த முன்னேற்பாடுகளுடன் வர வேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
****************************
பலத்த பாதுகாப்பு:
குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறவுள்ள டெல்லி ராஜபாதையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
**********************************
10வது சுற்று பேச்சுவார்த்தை:
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு 10வது சுற்று பேச்சுவார்த்தையை இன்று தொடங்கியது.
**************************
பிப்ரவரி 19ஆம் தேதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி 19ஆம் தேதி ரதசப்தமி உற்சவம் நடைபெறும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
************************
தமிழகம் முழுவதும் முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் 20.01.2021தொடங்கப்பட்டுள்ளன.
**********************************
உச்சநீதிமன்றம் ரத்து செய்தது:
சுற்றுசூழல் முன் அனுமதி பெறாததால் விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
*********************
விளையாட்டுச் செய்திகள்
65வது லீக் ஆட்டம்:
7வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டியின் இன்று இரவு 07.30 மணிக்கு நடைபெறும் 65வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-பெங்க;ரு அணிகள் மோதுகின்றன.