வித்தியாசமான பாஜ்ரா பூரி

 


வித்தியாசமான பாஜ்ரா பூரி!!

மாலை வேளையில் குழந்தைகளுக்கு ஏதாவது கொஞ்சம் வித்தியாசமாக சமையல் செய்து கொடுக்க நினைத்தால் பாஜ்ரா பூரி செய்து கொடுக்கலாம். இந்த பூரி காரசாரமாக சாப்பிட சு ப்பராக இருக்கும். இப்போது இந்த பாஜ்ரா பூரியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :

கம்பு மாவு - 3 கப்

வெள்ளை எள் - 3 டீஸ்பு ன்

சீரகத் தூள் - 2 டீஸ்பு ன்

மாங்காய்த் தூள் - 2 டீஸ்பு ன்

வெந்தயக்கீரை - 2 கட்டு

பொடித்த சர்க்கரை - 1 டீஸ்பு ன்

மஞ்சள் தூள் - சிறிதளவு

இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பு ன்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பு ன்

தனியா தூள் - 1 டீஸ்பு ன்

செய்முறை :

👉 முதலில் வெந்தயக்கீரையை சுத்தமாக கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, வெள்ளை எள், சீரகத் தூள், மாங்காய்த் தூள், வெந்தயக்கீரை, பொடித்த சர்க்கரை, மஞ்சள் தூள், இஞ்சி - பு ண்டு விழுது, மிளகாய்த்தூள், தனியா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்க வேண்டும்.

👉 பின்னர் மசாலா கலந்த மாவில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பு ரி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதன் மேல் எண்ணெய் 1 டீஸ்பு ன் தடவி மூடி 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

👉 பின்பு பூரி மாவை சிறு உருண்டைகளாக்கி,  பூரி போன்று தேய்த்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

👉 பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள பூ ரிகளை ஒவ்வொன்றாகப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பாஜ்ரா பூரி தயார்!!! 

இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் சமையல்  பயணம் தொடரும்.

வணக்கம் அன்புடன் கார்த்திகா