மழை பாதிப்பு குறித்து இனிமேல்தான் கணக்கு எடுக்க போகிறோம் என முதல்வர் அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
பல மாவட்டங்களில் பருவ மழை பெய்து வரும் நிலையில், மழை அதிகமாக பெய்ததால் பல இடங்களில் மழைநீர் புது வெள்ளம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அனைத்தும் மழை நீரில் அடியோடு மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த இழப்பால் பெரும் துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர் விவசாயிகள். இந்த நிலையில் பாதிப்புக்கு இனிமேல்தான் கணக்கு எடுக்க போவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கூறுகையில், மழை பாதிப்பு குறித்து இனிமேல்தான் கணக்கு எடுக்க போகிறோம் என முதல்வர் அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் காலம் தாழ்த்தாமல் ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.