செய்திகள்

 


அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 17ம் தேதி (ஞாயிறு) முதல் 19ம் தேதி வரை மூன்று நாட்கள், அனைத்து மாவட்டங்களிலும் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. 

_________________________

 தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக, பாஜ, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி குறித்து தங்களின் இறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்காமல் கண்ணாமூச்சி காட்டி வருகிறது. 

அதில் பாஜ கட்சி ஒருபடி மேலே போய் ‘சென்ட்ரல் பவர்’ மூலம் பாலிடிக்ஸ் செய்து வருகிறது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி அதிக சீட்டை அதிமுகவிடம் இருந்து பெறுவதில் உறுதியாக உள்ளது.

_________________________

தாம்பரம் அதிமுக நகர செயலாளராக கூத்தன் இருந்து வருகிறார். 

மேலும் நகர துணை செயலாளராக கிருஷ்ணமூர்த்தி அதிமுகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்து விட்டதால் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பதவிக்கு யாரும் நியமிக்கப்படாமல் இருந்தது. 

எனவே இந்த பதவிக்காக தாம்பரம் நகர அதிமுகவை சேர்ந்த பலர் பல வழிகளில் முயற்சி செய்து வந்தனர். நீண்ட இழுபறிக்கு பின்னர் தற்போது தாம்பரம் நகர அதிமுக துணை செயலாளராக சேலையூர் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

_______________________

அஞ்சல்துறை தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும் எனக்கூறி மத்திய தபால் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு, திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.

எனவே, அஞ்சல் துறையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையை உடனடியாக ரத்து செய்து, தமிழ்மொழி வாயிலாகவும் கணக்காளர்களுக்கான தேர்வு நடத்தபடுமென புதிய அறிவிக்கை வெளியிட்டு, தமிழக இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதோடு, இந்திய அரசியல் சட்டத்தின் கூட்டாட்சித் தன்மையும் பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

________________________

துறைமுக விரிவாக்கப் பணிகள் நடைபெற்றால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ள அபாயத்தில் மூழ்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் 35 லட்சம் மக்களுக்கு ஏற்படும் நிலை உருவாகிறது. 

ஆகவே 82 கிராமங்களில் வாழும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்களுக்கும், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வாழும் 35 லட்சம் மக்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தும். 

எனவே, “மக்கள் கருத்துக் கேட்பிற்கான” கூட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். 

இந்தத் திட்டத்திற்குச் சுற்றுச்சூழல் துறை அனுமதியோ அல்லது திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் எவ்வித நடவடிக்கைகளையுமோ முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசும் - பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசும் எடுக்கக் கூடாது.