சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் செய்த காரியத்தால் வியப்பு

சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் பலரும் நேர்மையாக செயல்பட்டு, தங்களுக்கு கிடைத்த பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகை, பணத்தை, உரியவர்களிடம் ஒப்படைத்த சம்பவங்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அவற்றில் சில சம்பவங்களை பார்க்கலாம்.

சென்னை அடையாறு மண்டலத்தில் குப்பைகள் சேகரிக்கும் பேட்டரி வாகனத்தை ஓட்டும் 38 வயதான மூர்த்தி என்பவர், சில தினங்களுக்கு முன் வழக்கம்போல பணியை மேற்கொண்டுள்ளார். அப்போது சாலையில் வெளிநாட்டு பணத்துடன் கிடந்த பெட்டி ஒன்றை கண்டெடுத்துள்ளார். உடனடியாக தனது மேற்பார்வையாளர் செல்வத்தை அழைத்து விவரத்தை கூறியுள்ளார்.

அந்த பெட்டி மயிலாப்பூர் அருண்டேல் தெருவில் வசிக்கும் மேரி சித்ராவுக்கு சொந்தமானது என கண்டுபிடிக்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

M Moorthy (in reflective jacket), battery operated vehicle driver for Urbaser, along with Selvam K, supervisor, returning the foreign currency to Mary Chitra, a Mylapore resident.

இதேபோல் கடந்த மாதம் கடற்கரைக்கு ஒரு ஜோடி மோதிரத்தை தொலைத்து விட்டு பரிதவித்துள்ளது. அங்கு தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டவர்களிடம் அவர்கள் விவரத்தை சொல்ல, சில மணி நேரத்தில் மோதிரம் கண்டெடுக்கப்பட்டது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு பெசன்ட் நகரில் உள்ள ஒரு வீட்டின் குப்பைகளுக்கு இடையே கிடந்த மூன்று சவரன் தங்கச் சங்கிலியைக் கண்டுபிடித்து ஒப்படைத்துள்ளார்.

இதேபோல்  (CENTRAL STATION NEAR )ATM CARD & OFFICE ID CARD  தொலைத்து விட்டு பரிதவித்துள்ளர்களிடம் அவர்கள் விவரத்தை சொல்ல, சில மணி நேரத்தில்  கண்டுபிடிக்கப்பட்டு உயிரவரிடம்  ஒப்படைக்கப்பட்டது. 

இத்தகைய நேர்மையான செயல் ஒருபுறம் இருக்க ஓட்டுநர்கள் சிலர் கடமையில் இருக்கும்போது கூட உயிரைக் காப்பாற்றியதாக மண்டல அதிகாரி சதீஷ் கூறியுள்ளார்.

சரத்குமார் என்பவர் எலியட்ஸ் கடற்கரையில் பணியில் இருந்தபோது, கடலில் சிக்கிய குழந்தையை மீட்டுள்ள சம்பவமும் நடைபெற்றுள்ளது.

தொடர்ந்து நடைபெறும் இத்தகைய சம்பவங்களால் தூய்மைப் பணியாளர்கள் செயலானது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.