சென்னையில் போராட்டம் நடத்த தடை

சென்னையில் 30.01.2021 நள்ளிரவு முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை விதித்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். 

ஊர்வலங்கள், பொதுக்கூட்டம், மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் ஆகியவை நடத்த தடை விதித்தும் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். 

சென்னையில் பதற்றமான நேரங்களில், போராட்டக் காலங்களில், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காலங்களில் பிரிவு 41-சென்னை நகர போலீஸ் சட்டம்-1888 -ன் கீழ் 15 நாட்களுக்கு ஊர்வலங்கள்,பொதுக்கூட்டம் , உண்ணாவிரதம், பொது நிகழ்ச்சிகள், ஆர்ப்பாட்டம், கும்பலாகக் கூடுதல், மனிதச் சங்கிலி உள்ளிட்ட அனைத்துக்கும் காவல் அனுமதியின்றி நடத்தக்கூடாது என அறிவிப்பு. 

தற்போது கொரோனா காரணமாக தொடர்ந்து இதுபோல் அறிவிக்கப்பட்டு வருகிறது.