சென்னை மெரினா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில், பொங்கல் விடுமுறை நாட்களான 15, 16, 17ஆம் தேதிகளில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
__________________________
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
______________________________
தமிழகத்தில் போகிப் பண்டிகையின்போது ரப்பர், பழைய டயர், டியூப், பிளாஸ்டிக் போன்றவற்றை எரிப்பதை தவிர்க்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது
______________________________________
மலேசியாவில் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
______________________________
2021ஆம் ஆண்டின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் குறியீட்டு வரிசையில் ஜப்பான் நாட்டிற்கான பாஸ்போர்ட் முதல் இடத்தை பிடித்துள்ளது.
_________________________
நாட்டின் பாதுகாப்பிற்கு சீனா மற்றும் பாகிஸ்தான் தொடர்ந்து அச்சுறுத்தலாகவே இருப்பதாக இந்திய ராணுவத் தளபதி நரவானே தெரிவித்துள்ளார்.
________________________________
சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்தை பார்க்க 5,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.
___________________________
புதுச்சேரி நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
______________________
பறவைக்காய்ச்சல் பீதியால் கோழி சந்தைகளை மூட வேண்டாமென்று அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
______________________________
வருகின்ற 15ஆம் தேதி அதிகாலை முதல் திருப்பதியில் மீண்டும் சுப்ரபாத சேவை தொடங்க உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
___________________________
பொங்கலை முன்னிட்டு திருச்சியில் 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
__________________________________
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், கடலூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிக கனமழையும், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உட்பட 11 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.