இந்த ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை

 



இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி ஆளுநர் உரையுடன், சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இந்திய அரசமைப்பு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை பிப்ரவரி 2 ஆம் தேதி , காலை 11.00 மணிக்கு  கலைவாணர் அரங்கம், மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகை கூட்டாங்கத்தில் கூட்ட இருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.