மக்கள் பிரச்னைகள் தொடர்பான மனுக்களை நானே சேகரித்து, சீல் வைத்து மக்களுக்கு ரசீது வழங்குவேன் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய ஸ்டாலின், ஜனவரி 29-ஆம் முதல் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற புதிய கோணத்தில் தேர்தல் பிரசாரம் துவங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
விடியலை நோக்கி, மக்கள் கிராம சபையை தொடர்ந்து உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரச்சாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரச்சாரம் காலை மாலை என 30 நாட்கள் பிரச்சாரம் செய்யப்படும் என கூறியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் 100 நாட்களில் போர்க்கால அடிப்படையில் மக்கள் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும், மக்கள் பிரச்னைகள் தொடர்பான மனுக்களை நானே சேகரித்து, சீல் வைத்து மக்களுக்கு ரசீது வழங்குவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற புதிய தேர்தல் பிரசாரத்தை திருவண்ணாமலையில் இருந்து தொடங்குகிறார்
திமுக தலைவர் ஸ்டாலின். தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.