குஜராத்தின் பிரசித்தி பெற்ற சோம்நாத் கோயில் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் முன்னாள் முதல்வர் கேஷூபாய் படேல் அறக்கட்டளை தலைவராக பல ஆண்டுகள் பதவி வகித்தார்.
அவர் மறைவுக்குப் பிறகு தலைவர் பதவி காலியாக இருந்தது. இதில் அறக்கட்டளை உறுப்பினராக இருந்த பிரதமர் மோடியை தலைவராக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
வீடியோ கான்பரன்ஸ் மூலம் அறக்கட்டளை உறுப்பினர்கள் நேற்று நடத்திய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையில், பாஜ மூத்த தலைவர் அத்வானி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத்தை சேர்ந்த சமூக சேவகர் பர்மர், தொழிலதிபர் ஹர்ஷவர்தன் நியோதியா ஆகியோர் உள்ளனர்.
_____________________
வருகிற 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் புதிதாக வாங்கப்பட்ட ரபேல் போர் விமானம் பங்கேற்கிறது. டெல்லியில் வரும் 26ம் தேதி நடக்க உள்ள குடியரசு தின விழா அணி வகுப்பில் முதல் முறையாக ரபேல் போர் விமானம் பங்கேற்க உள்ளது.
****************************
இந்தியாவின் முதல் உள்நாட்டு 9 மிமீ மெஷின் பிஸ்டலை ராணுவ ஆராய்ச்சி மற்றும்மேம்பாட்டு அமைப்பு உருவாக்கியுள்ளது. காலாட்படை பள்ளி மற்றும் டிஆர்டிஓவின் ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஸ்தாபனம் (ARDE, புனே ஆகியவை இணைந்து இந்த ஆயுதத்தை உருவாகியுள்ளது.
விமான தர அலுமினியத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மேல் ரிசீவர் மற்றும் கார்பன் ஃபைபரை பயன்படுத்தி உலோக 3D அச்சிடுதல் என்ற நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இது தயாராகியுள்ளது.
*****************************
ரூ.9 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கிய தொழில் அதிபர் விஜய் மல்லையா, 2016ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டன் தப்பி சென்றார். அவரை நாடு கடத்தும் உத்தரவு 2017 ஏப்ரலில் ஸ்காட்லாந்து போலீசாரால் பிறப்பிக்கப்பட்டது. தற்போது மல்லையா ஜாமீனில் வெளியே இருக்கிறார். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் கடந்தாண்டு அனுமதி அளித்தது.
இந்நிலையில், அவரை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் பற்றி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யு.யு. லலித், அசோக் பூஷண் அமர்வில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நேற்று ஆஜராகி, ‘‘விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. இங்கிலாந்து சட்டத்தின்படி, விஜய் மல்லையா மீதான விசாரணை முடியும் வரை நாடு கடத்த முடியாது.