மேஷம்
சந்திரன் இன்றைய தினம் ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பணவரவு சற்று சுமாராகத் தான் இருக்கும். வீண் செலவுகளை தவிர்த்து சிக்கனமாக செயல்படுவது நல்லது. மனதில் ஏற்பட்டிருந்த பாரங்கள் நீங்கி மன மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். வங்கி சேமிப்பு உயரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலனை அடையலாம். இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். தொழில் விசயமாக வெளியூர் பயணம் செல்வீர்கள். எதிலும் கவனமுடனும் நிதானமாகவும் செயல்படுவது நல்லது.
மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். உத்தியோக ரீதியாக சிலருக்கு அன்னிய நாட்டிலிருந்து அழைப்புகள் வரலாம். நண்பர்களின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உடன்பிறந்தவர்கள் வழியில் நன்மைகள் நடைபெறும்.
கடகம்
சந்திரன் இன்றைய தினம் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். அலட்சிய போக்கால் எதிர்பாராத வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் வரலாம். பேச்சில் நிதானம் தேவை. வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். நிதானத்தை கடைப்பிடிப்பதன் மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். இதுவரை இருந்த பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியம் நிறைவேறும்.
கன்னி
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உங்களுக்கு உறவினர்கள் வழியில் சுப செய்தி வந்து சேரும். உடன்பிறப்புகளால் நன்மைகள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். தொழில் புரிவோர்க்கு வெளியூர் தொடர்புகள் கிடைக்கும். வங்கி சேமிப்பு உயரும். குருவின் பார்வையால் உற்சாகமும் உடல் சுறுசுறுப்பும் அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பொன் பொருள் சேரும்.
துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் தேடி வரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபார ரீதியான பயணங்களால் நன்மைகள் நடைபெறும். வழக்கு விஷயங்களில் சாதகமான பலன்கள் கிட்டும். செய்யும் தொழிலில் வருமானம் பெருகும். இன்று குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மன மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும். அரசு துறை சார்ந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். வழக்கு சம்பந்தங்களில் வெற்றி வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். நண்பர்களின் உதவியால் எடுத்த காரியம் எளிதில் முடியும். கொடுத்த கடன்கள் வசூலாகும். பணவரவு நன்றாக இருக்கும்.
தனுசு
சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியாக இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சற்று மந்த நிலை காணப்படும். உறவினர்களின் உதவியால் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும்.
மகரம்
சந்திரன் இன்று எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் நிதானம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. முடிந்த வரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்த்து விடவும்.
கும்பம்
சந்திரன் இன்று ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் கோவிலுக்கு செல்வீர்கள். மனதில் இருந்த உளைச்சல்கள் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். பொருளாதாரம் நன்றாக இருக்கும். இன்று குடும்பத்தில் பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உங்கள் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
மீனம்
சந்திரனால் இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் தேடி வந்து மகிழ்ச்சியை அதிகரிக்கும். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிட்டும்.