தன் வாழ்வில் பெரும் பகுதியை யாசகம் பெற்றே வாழ்ந்துள்ள பூல்பாண்டியன், அந்தப் பணத்தை சுயமாக தனக்கே வைத்துக் கொள்ளாமல், அது ஏழை, எளிய மக்களுக்கும், இந்த சமூகத்திற்கும் பயன்பட வேண்டும் என்று பல்வேறு உதவிகள் செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டி வயது 70.
இவர் கடந்த சில ஆண்டுகளாக ஊர் ஊராக சென்று யாசகம் பெற்று வருகிறார்.அவருக்கு கிடைக்கும் பணத்தை கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்கள், தொழிலாளர்கள்,பள்ளிகள் என தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் பூல்பாண்டி தான் யாசகத்தின் மூலம் பெற்ற 10 ஆயிரம் ரூபாய் பணத்தை நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு விடம் வழங்கினார்.இவர் சிலமாதங்களுக்கு முன்னர் மதுரை கலெக்டரிடம் 2 லட்சத்து 70 ஆயிரம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக குமரி முதல் காஷ்மீர் வரை 400 பள்ளிகளுக்கு ஒரு பள்ளிக்கு தலா ரூ.5,000 வீதம் என பிரித்துக் கொடுத்து அப்பள்ளிகளுக்குத் தேவையான நாற்காலி மேசைகள், குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் போன்றவைகளை வாங்கிக் கொடுத்துள்ளார்.
மும்பையில் ஒரே நாளில் 20,000 மரக் கன்றுகள் வழங்கி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.