கொரோனா தொடங்கியதில் இருந்து பொது நிகழ்வில் கலந்து கொள்ளாமல் இருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார்.
ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வந்த ரஜினிகாந்திற்கு பட்டாசு வெடித்து ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
இந்த சந்திப்பில், அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய அறிவிப்பை வெளிட்ட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் 12 மணியளவில் முடிந்தது. இந்த கூட்டத்தில் இரண்டு முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதில் கட்சி தொடங்கினால் ஏற்படும் பாதகங்களும், கட்சி தொடங்காமல் இருந்தால் ஏற்படும் பாதகங்களும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளிடம் ரஜினி கருத்துக்களை ரஜினி கேட்டறிந்தார்.
அதில் அனைவருமே கட்சி தொடங்க வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை செய்த நிலையில் தற்போது அந்த ஆலோசனை கூட்டம் முடிந்துள்ளது. இதனால், ரஜினியின் அடுத்த முடிவு என்னவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலோசனை நடைபெற்று முடிந்த பின் சென்னை போயாஸ் கார்டனில் உள்ள அவர் இல்லத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்பொழுது அவர் கூறுகையில், நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் உங்க கூட இருப்போம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அவர்களுடைய கருத்தை கூறினார்கள்.நான் என்னுடைய கருத்தை கூறினேன்.எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் என்னுடைய முடிவை தெரிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஆலோசனைக்கு பின்னர் தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில்,இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் தலைவர் ரஜினியிடம் இருந்து அறிவிப்பு வரும். தலைவர் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் கட்டுப்படுவோம் என்று கூறியுள்ளார்.