நிவர் புயலால் பாதிக்கப்பட்டபகுதியில் முதலமைச்சர்

 



நிவர் புயலால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி சதுப்பு நிலக்காடுகளை ஆய்வு செய்து வருகிறார் முதலமைச்சர் பழனிசாமி.


வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது,புதுச்சேரி அருகே கரையை கடந்தது.இதனால் விளைவாக சென்னை,கடலூர் ,செங்கல்பட்டு என வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.மேலும் பல் வேறு இடங்களில் மரங்கள் சரிந்து கிடந்தன.இதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை வேளச்சேரி சதுப்பு நிலக்காடுகளை ஆய்வு செய்து வருகிறார் முதலமைச்சர் பழனிசாமி.


மேலும் நிவர் புயல் பாதிப்பு, மழை சேதம் உள்ளிட்டவற்றை அதிகாரிகளிடம் நேரில் கேட்டறிந்து வருகிறார் முதலமைச்சர் பழனிசாமி