சென்னையில் 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் சரக உதவி ஆணையர்கள், 12 மாவட்ட துணை ஆணையர்கள் கீழ் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 35 மகளிர் காவல் நிலையங்களும் ஒரு துணை ஆணையரின் செயல்படும் என 2019-ல் அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களுக்காக மீண்டும் சரக உதவி ஆணையர்கள் அந்தந்த மாவட்ட காவல் துணை ஆணையர்கள் கீழ் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.
-----------------------------------
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2,107 கன அடியாக குறைந்த்துள்ளது. அணையின் நீர்மட்டம் 106.57 அடியாகவும், நீர் இருப்பு 73.61 டிஎம்சி-யாகவும் உள்ளது. அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு வினாடிக்கு 1100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
________________________
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 406 கன அடியில் இருந்து 424 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 94.57 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 24.6 டிஎம்சி, அணையில் இருந்து 2,350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
_______________________
குற்றால அருவியில் நீர்வரத்து குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் கடந்த 2 நாட்களாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது
___________________________________
வீராணம் ஏரிக்கு நீர் வரத்து 54 கன அடியாக உள்ளது. கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியின் முழு கொள்ளளவான 47.50 அடியில், நீர் இருப்பு 46.27 அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 54 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.