நடிகை விஜயசாந்தி இன்று பாஜகவில் இணைந்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட பல மொழி திரைப் படங்களில் துணிச்சல் மிக்ககதாபாத்திரங்களில் நடித்துபுகழ்பெற்றவர் விஜயசாந்தி. திடீரென இவர் ‘தல்லி தெலங்கானா’ எனும் அரசியில் கட்சியை தொடங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதன் பின்னர், அக்கட்சியை கலைத்து விட்டு பாஜகவில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆனால், தெலங்கானாவில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் கட்சியில் பிரச்சாரக் குழுவின் தலைவராக விஜயசாந்தி இருந்தார்.
விஜயசாந்தி மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டியை நேற்று சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் இன்று பாஜகவில் முறைப்படி இணைந்தார்.