சில வாரங்களில் கொரோனா வைரஸ் தடுப்பூசி

 



இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்னும் சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என்றும், இதை மலிவு விலையில் மக்களுக்கு செலுத்த முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பிரதமர் கூறினார்.

நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி குறித்து  அனைத்து கட்சி எம்பிக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். 

அப்போது அவர்களிடம் பிரதமர் கூறும் போது தடுப்பூசி செலுத்துவதில் இந்தியாவுக்கு நீண்ட கால அனுபவம் உள்ளது. 

கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் மிகுந்த வீரியத்துடன் தயாரிக்கப்பட்டு வரும் மருந்து மக்களுக்கு செலுத்தப்படும். மருத்துவ முன்கள பணியாளர்கள் முதியவர்கள் ஆகியவருக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இந்த மருந்தின் முதல் கட்ட சோதனைகள் முடிந்து விட்டது. இரண்டாவது கட்ட பரிசோதனை நடந்து வருகின்றது. இதைத் தொடர்ந்து, ஐதரபாத்தில் உள்ள பாரத் பயோடெக், புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்திய ஆகிய மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் சென்று அவர் ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து, இன்று கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் 3 நிறுவனங்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனாவை கட்டுப்பத்த இந்த நிறுவனங்களில் உள்ள விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகளை பிரதமர் பாராட்டினார்.

கொரோனா தடுப்பூசி குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. மேலும், விவசாயிகள் போராட்டம் குறித்தும் விவாதிக்கபட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை தலைவர், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

குறிப்பாக மலிவு விலையில் இந்த மருந்து கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.