தகவல் அறியும் உரிமைச் சட்டம்.... பதில் தராத அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை.... மாநில தகவல் ஆணையர் தகவல்..

 



தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் தராத பொது தகவல் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்மாநில தகவல் ஆணையர் ஆர்.பிரதாப்குமார். 

மாநில தகவல் ஆணையர் ஆர்.பிரதாப்குமாரின் விசாரணை முகாம்புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத் தில் நடைபெற்றது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழ்நாடு தகவல்ஆணையத்தின் மூலம் மாநிலம் முழுவதும் மாதத்திற்கு 1,300 முதல்1,500 மனுக்கள் வரை தீர்வு காணப்பட்டு வருகிறது. 

பொதுமக்களின் மனுக்களுக்கு உரிய தகவல் தராதவர்கள் மீது பிரிவு-20 (1)-ன் கீழ் அபராதம் வசூலிக்கப்படுகிறது. பிரிவு 20(2)-ன் கீழ் நிர்வாக ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்படுகிறது. 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப் படும் 90 சதவீத கேள்விகளுக்கு அலுவலர்கள் மூலம் உரிய பதில் அளிக் கப்படுகிறது. 

10 சதவீத கேள்விகள் மீதுநடவடிக்கை எடுக்கப்படுகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)-ன் கீழ் வருவாய்த்துறை எனில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பொது தகவல் அலுவலர் ஆவார். 

அவரிடம் முறையீடு செய்ய வேண்டும். இரண்டாம் மேல்முறையீட்டு மனுவினை ஆணையத் திற்கு நேரடியாகவோ அல்லது பதிவுதபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். 

இதுகுறித்து பொதுமக்கள் போதிய விழிப்புணர்வு பெற வேண்டும்.பிரிவு 6(1)-ன் கீழ் மனுக்கள் அனுப்பப்பட்டு நேரடியாக தகவல் ஆணையத்திற்கு அனுப்பப்படுகிறது. மேலும்,எவ்வித பிரிவும் இல்லாமல் நேரடியாக தமிழ்நாடு தகவல் ஆணையத் திற்கு மனுக்கள் தவறாக அனுப்பப்படுகிறது. 

எனவே, ஆணையத்திற்கு தகவல்கேட்டு மனுக்கள் அனுப்பும் முறைகள் குறித்து பொதுமக்கள் போதிய விழிப்புணர்வு பெற வேண்டும். 

இன்றைய விசாரணையில் மனுக்களுக்கு உரிய தகவல் தெரிவிக்காத 3 அலுவலர்களுக்கு அபராதம் விதிக்கப்பட் டுள்ளது. மேலும், சட்டத்திற்கு புறம் பாக தவறான தகவல் கேட்கும் மனுதாரரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். 

பொதுமக்களுக்கு தகவல் அளிப்பதில் தமிழ்நாடு தகவல் ஆணையம் இந்தியாவில் இரண்டம் இடத்தில் உள்ளது என்றார். இம்முகாமில் சிறப்புமாவட்ட வருவாய் அலுவலர் ஜானகிஉள்ளிட்ட தொடர்புடைய அலுவலர் கள் கலந்து கொண்டனர்.