செவ்வாய்ப்பேட்டையில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் அரக்கோணம் - வேளச்சேரி இடையே மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சீரமைக்கப்படாததால் விரைவு ரயில்கள் செல்லும் பாதையில் ரயில் இயக்கப்படுகிறது.
________________________________
தமிழகத்தில் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு சீருடை வழங்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். நியா விலைக்கடை ஊழியர்கள் சீருடை அணியாமல் இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
_______________________________________
திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து சிவகங்கையில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. திமுக பொருளாளர் டி,ஆர். பாலு தலைமையிலான தேர்தல் குழுவினர் தமிழகம் முழுவதும் கருத்து கேட்டுவருகின்றனர்.
___________________________
நாளை முதல் ஜனவரி 3-ம் தேதி வரை திருத்தணி கோயிலுக்கு பக்த்தர்கள் வரத்தடைவிதித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிறுவாபுரி பாலமுருகன் கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கும் மக்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் திருச்செந்தூர் கடற்கரையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு செல்லவோ கடலில் குளிக்கவோ பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
__________________________________
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சிறப்பு வகுப்புக்கு முதல்வர் ஒப்புதல் அளித்தவுடன் அட்டவணை வெளியிடப்படும் எனவும் கூறினார்.
____________________________
அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற ரஜினியின் முடிவுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினி உடல் நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும் என காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோவில் தரிசனத்திற்கு பின் பேசிய அவர் கூறினார்.
____________________________________________
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரித்து ரூ.37,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.7 அதிகரித்து ரூ.4,725-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.200 உயர்ந்து கிலோ ரூ.72,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
_____________________________________
செங்கிப்பட்டி அருகே சொகுசு காரில் மறைத்து கடத்தி வரப்பட்ட 59 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. கஞ்சா கடத்தியதாக பிரபு, ஆந்திராவை சேர்ந்த சிவசங்கர் ரெட்டி, ஒடிசாவை சேர்ந்த திவாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.