மதுரை எல்லீஸ்நகர் அரசு போக்குவரத்து பணி மனையில் ரூ.15 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ரூ.15 லட்சம் கொள்ளை போனது தொடர்பாக பணிமனை மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கொள்ளை தொடர்பாக முதல்கட்டமாக பாண்டியராஜன், செல்வம், சென்றாயன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
__________________________________________
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம் நடத்த தீட்சிதர்கள் முடிவு செய்துள்ளனர். இ-பாஸ் முறையை ரத்து செய்தால் மட்டுமே தேரோட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
பொதுமக்கள் நலன் கருதி தேரோட்டம் நடத்தப்படும் என தீட்சிதர்கள் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
________________________________________
மயிலாடுதுறையில் பழைய இரும்புக்கடையில் இலவச பாடப்புத்தகங்களை விற்பனை செய்த மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் மேகநாதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சுமார் 2 டன் புத்தகங்களை எடைக்கு வாங்கிய பழைய இரும்புக்கடை உரிமையாளர் பெருமாளும் கைது செய்யப்பட்டுள்ளார்.
______________________________
தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாததால் வீட்டில் தனிமையில் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
__________________________________
ஐசிசி விருதை மிகப்பெரிய கெளரவமாக கருதுகிறேன் என விராட் கோலி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். விருது பெற உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும், பயிற்சியாளருக்கும், நண்பர்களுக்கும் நன்றி எனவும் கூறினார்.