தமிழகத்தில் கொரோனா பாதிப்பு

 




தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,96,475 -ஆக உயர்ந்துள்ளது. கடந்த மாதங்களை காட்டிலும் இம்மாதம் தொற்று எண்ணிக்கை குறைந்தே காணப்படுகிறது.

மாவட்ட வாரியாக என எடுத்துக்கொண்டால் சென்னை, கோவை, செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாகவும் கள்ளக்குறிச்சி, திருவாரூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலும் உள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் இன்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.