சொந்த ஊரில் அதிக நலத்திட்ட உதவிகள்.. ஒரே நாளில் 10,954 பயனாளிகளுக்கு உதவி... ஒபிஎஸ் அதிரடி
தனது சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் 10,954 பயனாளிகளுக்கு, ரூ.4.51 கோடி நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வழங்கினார்.
தேனி பழனிசெட்டிபட்டி பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சரும் ஆன ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். அவர் 10 ஆயிரத்து 954 பயனாளிகளுக்கு, சுமார் 4 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
போடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் மற்றும் 2500 ரொக்கம் இதனுடன் சேர்த்து இலவச வேட்டி சேலைகளையும் வழங்கி துவக்கினார்.
ஜனவரி 4ம் தேதி முதல் அந்தந்த நியாய விலைக்கடைகளில் வழங்கப்பட்டுள்ள டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி அடிப்படையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு இலவச வேட்டி சேலைகளை பெற்றுக் கொள்ளலாம் என துணை முதல்வர் தெரிவித்தார்..
தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், சத்தம் இல்லாமல் துணை முதல்வர் ஓபிஎஸ் தனது சொந்த தொகுதியியான போடியில் தீவிரமான களப்பணியில் இறங்கி உள்ளார்.