நம் அண்டை நாடான பாகிஸ்தான், பயங்கரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் கொடுத்து, பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்கும் முயற்சிகளில், தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் விளைவாக, இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவி, தாக்குதல்களை நடத்த, பயங்கரவாதிகள் சதித் திட்டங்களை தீட்டுகின்றனர். எனினும் அவற்றை, நம் எல்லை பாதுகாப்புப் படையினர் முறியடித்து வருகின்றனர்.
இந்தியா - பாக் இடையே, மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், பாக்., வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, நேற்று நிருபர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியாவுடனான உறவு குறித்தும், சில கருத்துக்களை அவர் முன்வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில்,“தற்போது இருக்கும் சூழலில், இப்போது இந்தியாவுடன் பேச்சு நடத்த, எங்களால் முடியாது. இந்த நேரத்தில் பேச்சு நடத்துவதற்கு, சூழல்கள் சாதகமாக இல்லை,” என்றார்.