செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு..அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

 

நடப்பு செமஸ்டருக்கான தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 25ஆம் தேதியன்று நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. வீடியோ வாயிலாக கல்லூரி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் முடிந்த பிறகே, இதர ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு தொடங்கும்; இதுகுறித்து விரிவான அட்டவணை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

டிசம்பர் 7ஆம் தேதி முதல் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், செமஸ்டர் தேர்வுகளை தள்ளிவைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.