கர்நாடக சட்டமேலவை துணைத்தலைவர் எஸ்.எல்.தர்மேகவுடா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். சிக்கமகளூரு மாவட்டம் காடூரில் ரயில் தண்டவாளம் அருகே தர்மேகவுடா உடல் மீட்கப்பட்டது. எஸ்.எல். தர்மேகவுடாவின் சடலத்தை மீட்டு விசாரணையை தொடங்கியுள்ள போலீஸ் இதற்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறது.
தர்மேகவுடா தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது.
நேற்றிரவு நேற்றிரவு வெளியில் ஒரு சிறிய வேலை இருப்பதாக கூறி தர்மேகவுடா வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.
ஆனால் இரவு முழுவதும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் இது தொடர்பான புகாரை போலீஸில் அளித்திருந்தனர். ஆனால் அதற்குள் அவரது மரணச் செய்தி வந்துவிட்டது.
தற்கொலைக்கான காரணம் குறித்து தர்மேகௌடா கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படும் கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
துணை சபாநாயகர் தற்கொலை செய்துகொண்ட தர்மேகவுடா கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக சட்ட மேல் சபையின் துணை சபாநாயகராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த இவர் தேவகவுடாவின் தீவிர விசுவாசியாக திகழ்ந்தார்.
தர்மே கவுடாவின் இந்த முடிவு தனக்கு அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக தேவகவுடா தெரிவித்துள்ளார்
இதனிடையே தர்மேகவுடா அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்றும் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்திப்பதாகவும் கர்நாடக முன்னாள் முதலவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.