செய்திகள்

 



பெங்கள ரு அருகே ஐபோன் தயாரிக்கும் விஸ்ட்ரான் நிறுவனத்தை அடித்து நொறுக்கியதாக, 7,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 160 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

__________________________

குஜராத் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். 

________________________

டி.வி. நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத்  கைது செய்யப்பட்டார்.

___________________________________

இந்தியாவின் 52-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டிற்கான இறுதிக்கட்ட பணியான கவுண்ட்டவுன் நாளை (புதன்கிழமை) பகலில் தொடங்க உள்ளது. 

____________________________

குற்றாலம் அருவிகளில் குளிக்க 15.12.2020  முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

______________________

விழுப்புரத்தில் 10 ரூபாய் நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்பட்டது. அங்கு மக்கள் கூட்டம் கூடியதால் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். 

____________________________

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

______________________________

விண்வெளி துறையில் தனியார் பங்கேற்பதால், இந்திய தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன், அவர்கள் உலகப்புகழ் பெறுவார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.

________________________

கொல்கத்தா கப்பல் கட்டும் தளத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹிம்கிரி என்ற போர்க்கப்பல் தண்ணீரில் இறக்கி தொடங்கி வைக்கப்பட்டது.

________________________

தமிழகத்தில் தொழில் தொடங்கத் தேவையான நிலங்களை எளிதாக கண்டறிய சிப்காட் சாh;பில் தனி இணையதள வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

______________________________

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா;கள் மற்றும் பணியாளா;களுக்கு புகைப்படத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட திறன் அட்டை (ஸ்மாh;ட் காh;டு) விரைவில் வழங்கப்பட உள்ளன.