பாலியல் வழக்கில் சிக்கியதால் சஸ்பெண்டு செய்யப்பட்ட சசி எம்.எல்.ஏ. கேரள முதல்வரின் உத்தரவின் பேரில் பாலக்காடு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட உள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சசி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மகளிரணி பொறுப்பாளராக இருந்தவரிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இதனால் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த 2 ஆண்டுகளாக அவருக்கு கட்சியில் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் மீண்டும் அவருக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
வழக்கில் சிக்கியதால் சஸ்பெண்டு செய்யப்பட்ட சசி எம்.எல்.ஏ. முதல்வ்ர பினராய் விஜயன் உத்தரவின் பேரில் பாலக்காடு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட உள்ளார். இது கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.