கேரள இடதுசாரிகளின் வெற்றி அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து

 




கேரள இடதுசாரிகளின் வெற்றி அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து....


கேரள இடது ஜனநாயக முன்னணிக்கு உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் கிடைத்த மகத்தான வெற்றிக்கு அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் கம்யூனிஸ்ட் கட்சி தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் சர்வதேச ஊடகமான பீப்பி ள்ஸ் டெஸ்பாட்சில் பிரசுரமான ஒரு  கட்டுரையைப் பகிர்ந்துகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. எல்டிஎப் வெற்றிஊட கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின்  கூட்டு தாக்குதல்களுக்கு மத்தியில் வந்துள்ளது என்றுகட்டுரை கூறுகிறது. வளர்ச்சித் திட்டங்கள்  மற்றும்சிறந்த கோவிட் பாதுகாப்பு ஆகியவை மக்களிடையேவிவாதிக்கப்பட்டன. செய்தி ஊடகம் மற்றும் வலதுசாரிகளால் உருவாக்கப்பட்ட அதிகபட்ச பாதகமான நிலைமைகள் இருந்த போதிலும், இடது சாரிகள் கடந்த முறையை விட சிறந்த முன்னேற்றத்தை அடைய முடிந்தது என்று கட்டுரை கூறுகிறது.பினராயி விஜயன் தலைமையிலான அரசாங்கத்திற்கு முற்போக்கான மக்கள் ஏராளமான ஆதரவை அளித்து வருகின்றனர். கட்டுரையின் படி, இதற்கு பெண்கள் மற்றும் இளம் வேட்பாளர்கள் காரணமாக இருந்தனர்.