‘முட்டுக்காடு முதல் மாமல்லபுரம்’ - கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை
புத்தாண்டு அன்று இரவு நேரங்களில் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்!
- சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு
கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை
* கிழக்கு கடற்கரை சாலை-பழைய மாமல்லபுரம் சாலையில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்படும்
- செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன்
*******************
அரசு வாகனங்களில் தேவையற்ற உதிரி பாகங்களை நீக்க அறிவுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் - உயர்நீதிமன்ற உ
த்தரவின் அடிப்படையில் அறிவுறுத்தல்
********************
*பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற கைரேகையின்றி ரூ.2500 பெறலாம் - அமைச்சர் காமராஜ்*
*கைரேகை வைக்காமல் ஸ்மார்ட் ரேசன் கார்டை காட்டி பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறலாம்*
*பயோமெட்ரிக் முறையில் கைரேகை வேலை செய்வதில்லை என புகார் எழுந்த நிலையில் அமைச்சர் காமராஜ் அறிவிப்பு
********************
முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் மௌனம், சம்மதம் என்றுதான் அர்த்தம்
- அமைச்சர் கடம்பூர் ராஜூ
********************
உலகின் எடை குறைவான செயற்கைக்கோளை வடிவமைத்த தமிழக மாணவர்.. ஜூன் மாதம் விண்ணிற்கு அனுப்பும் அமெரிக்கா
*****************
திமுக நடத்தும் கிராம சபை கூட்டங்களுக்கு மக்கள் வரவேற்பு பெருகுவதை பார்த்து பதறுகிறது அதிமுக அரசு
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
*******************
ரஜினி ,கமல் வரும்போது அவர்களை பார்க்க வேண்டும் என்று தான் கூட்டம் கூடுமே தவிர, அது ஓட்டாக மாறாது; ரஜினி ஆரம்பிக்கும் கட்சிக்கு இப்போது நேரம் சரி இல்லை!
- மறைந்த எம்.பி.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் பேட்டி
*******************
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர்தான் எடப்பாடி பழனிசாமி
- வானதி சீனிவாசன், பாஜக மகளிரணி தலைவர்
***************