டெல்லியில் 'மிகவும் மோசமான' காற்றின் தரம்: வானிலை மையம் தகவல்

 



இன்று காலை நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 334 ஆக இருந்தது. இது மிகவும் மோசமான நிலை ஆகும். காற்றின் தரக்குறியீடு 50 வரை இருந்தால் மட்டுமே அது நல்ல நிலை. டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் காற்றின் தரம் மிகவும் மோசமாகவே இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.


டெல்லியில் ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும் காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்படும். இந்த ஆண்டு குளிர்காலத்தின் தொடக்கத்திலேயே காற்று மிகவும் மாசுபட்டு உள்ளது. கடந்த சில நாட்களாகவே தலைநகரில் காற்றின் தரம் மோசமாக இருந்து வருகிறது. ஒரு அடர்த்தியான மூடுபனி தேசிய தலைநகரை சூழ்ந்துள்ளது