இந்திய அணியில் அறிமுகமாகி இருக்கும் தமிழக வீரர் நடராஜன் வரும் நாட்களில் இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்ற நிலையில் இந்திய அணி மீது பிசிசிஐ கோபத்தில் உள்ளது. அதிலும் இந்திய அணி வீரர்கள் வெறும் 36 ரன்னிற்கு 9 விக்கெட்டுகளை இழந்தது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியில் அறிமுகமாகி இருக்கும் தமிழக வீரர் நடராஜன் வரும் நாட்களில் இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். தற்போது டெஸ்ட் அணியின் மூத்த பவுலர் ஷமி காயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். தொடரில் மீதம் இருக்கும் டெஸ்ட் போட்டிகளில் இவர் பவுலிங் செய்ய மாட்டார்.
இந்த நிலையில் தற்போது மொத்தமாக ஷமியின் மணிக்கட்டு முறிந்துள்ளது. இவருக்கு ஏற்கனவே வயது ஆகி வரும் நிலையில் தற்போது மணிக்கட்டு முறிந்துள்ளது.
தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடக்க உள்ள டெஸ்ட் தொடரிலும் கூட நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று.கூறப்படுகிறது. டெஸ்ட் தொடரில் இருந்து ஷமி வெளியேறி உள்ளார். இதனால் இவருக்கு பதிலாக நடராஜன் வர வாய்ப்புள்ளது. மீதம் உள்ள டெஸ்ட் போட்டிகளில் யாரை அணியில் எடுக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசனைகள் நடந்து வருகிறது.