சனிப்பெயர்ச்சி விழா... கட்டுப்பாடுகளுடன் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

 

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பக்தர்களை அனுமதிக்க நிர்வாகம் எடுத்த முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அனைத்து தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து பக்தர்களை அனுமதிக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் கோயிலுக்குள் மட்டும் பக்தர்களை அனுமதிப்பது என்றும், நள தீர்த்ததில்  பிரம்மதீர்த்தம் நீராட அனுமதிப்பதில்லை என்றும் முடிவெடுத்து, புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறை மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 “சனிப்பெயர்ச்சி தினமான 27-ம் தேதி குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்களை அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

சனிப்பெயர்ச்சி தினத்தை தவிர்த்து மீதமுள்ள 48 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னதானம் கோயிலுக்கு வெளியில் வழங்கப்படும்.

இந்த 48 நாட்களில் தரிசனத்துக்காக 60,000 மின்னணு அனுமதி சீட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி , அனுமதிக்கப்படும் பக்தர்களுக்கு முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும், கரோனா தடுப்பு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கரோனா தடுப்பு நடைமுறைகளை அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் திருவிழாவை நடத்திக் கொள்ளலாம் என அனுமதித்து வழக்கை முடித்து வைத்தார்.